90 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன் பாத்ரூம்! தூங்க முடியாத அவஸ்தை! வழக்கறிஞருக்கு ஏற்பட்ட விநோத நோய்!

வாஷிங்டன்: தூக்கம் இன்றி அவதிப்படும் 59 வயது நபரின் கண்ணீர் கதைதான் இந்த செய்தித்தொகுப்பு...


அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஓக்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் பாப் ஸ்வார்ட்ஸ். 59 வயதாகும் இவர், தனது 47வது வயதில் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பிறகு, தனது மனைவியுடன் சேர்ந்து Here to Help Foundation என ஒன்றை தொடங்கி, மிச்சிகன் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிதி சேவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் ஸ்வார்ட்ஸ் ஒரு விநோத பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். ஆம், இரவு தூங்கச் சென்றால் உறக்கம் வராமல் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் தூக்கமின்றி வாடும் அவருக்கு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதாம். சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டு வந்து, மிகவும் போராடி உறங்க நேரிட்டாலும், 4 மணி நேரத்திற்கு மேல் ஒருநாளில் உறங்க முடியவில்லை எனக் கூறுகிறார்.  

தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தூங்கினாலும் இரவில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க எழ நேரிடுவதாகவும், அவர் கவலையுடன் தெரிவிக்கிறார். இதுவரை 100 டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ள ஸ்வார்ட்ஸ்க்கு பிரச்னை தீரவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது அரிதிலும் அரிதான பிரச்னை எனக் கூறுகின்றனர்.  

உடலில் ஹார்மோன் கோளாறு ஏற்பட்டுள்ள ஸ்வார்ட்ஸ்க்கு, ரத்த நாளங்கள் சரிவர இயங்காத பிரச்னையும் ஏற்படடுள்ளது. அவரது நரம்புகள் மிக மோசமாக வீக்கமடைந்துள்ளன. இதனால், அவற்றை கையாள மருத்துவர்கள் தயங்குகின்றனர். சாதாரணமாக எழுந்து, கை, காலை நீட்டிவிட்டு அமர்ந்தால் கூட, ஸ்வார்ட்ஸ்க்கு பன்மடங்கு வேகமாக ரத்தம் எகிறுவதோடு, எனர்ஜியும் வீணாகிறது. தனது பிரச்னைக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என சோகத்துடன் கூறும் ஸ்வார்ட்ஸ் இதுபற்றி யாரேனும் மருத்துவ குறிப்பு வைத்திருந்தால் சொல்லுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

பிறந்தது முதலே சைவ உணவுகளை உண்டு வரும் ஸ்வார்ட்ஸ், 47 வயது வரை மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.