7G ரெயின்போ காலனி படத்தின் கதாநாயகன் ரவி கிருஷ்ணா மற்றும் கதாநாயகி சோனியா அகர்வால் இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்துள்ளனர்.
15 வருடங்களுக்கு பின் நேற்று இரவு தான்..! பிரபல ஹீரோ பற்றி சோனியா அகர்வால் வெளியிட்ட ரகசியம்!
இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 7G ரெயின்போ காலனி திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் ரவிகிருஷ்ணாவும் மற்றும் அனிதா என்ற கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும் இணைந்து நடித்தனர் .
இவர்கள் இருவரின் காதலை செல்வராகவன் வித்தியாசமான திரைக்கதை கொண்டு வெளிப்படுத்தியிருந்தார் . இந்தப் படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய வெற்றிப் படமாக்கப்பட்டது .
அந்த படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணா பெரிதாக தமிழ் சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை . இந்நிலையில் 15 வருடத்திற்கு பிறகு சோனியா அகர்வாலும் ரவி கிருஷ்ணாவும் சந்தித்துள்ளனர் . இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோவை சோனியா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
சோனியா அகர்வால் வெளியிட்ட இந்த புகைப்படமானது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு நேற்று இரவு தான் இந்த சந்திப்பு நடந்தது என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.