உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டு வயது சிறுவன் தன் தாய் பாசத்தை வெளிப்படுத்தி அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் நெகிழ செய்துள்ளான்.
தாயை காப்பாற்ற ஒன்றரை கிலோ மீட்டர் ஓடிய 8 வயது சிறுவன்! கேட்போரை நெகிழ வைக்கும் சம்பவம்!
தாயை காப்பாற்ற 1.5 கிலோமீட்டர் ஓடியுள்ளது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளான். இந்த சிறுவனின் பெயர் முஷ்டக். இவன் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள சந்த்கபீர் நகரில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இவனின் தந்தை தன் மனைவியை மிகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதைச்சகிக்க முடியாத முஷ்டக் 1.5 கிலோமீட்டர் ஓடி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளான். அங்கு தன் தந்தை, தன் தாயாருக்கு செய்து வரும் கொடுமைகளை கூறியுள்ளான்
அந்த காவல் நிலையத்தின் உயரதிகாரி இதனை சமூக வலைத்தளங்களில் முஷ்டக்கை பாராட்டி பரப்பியுள்ளார். இவனின் செயல் நம் அனைவருக்கும் பெரும் பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்றும், இது போன்று அனைவரும் தைரியமாக போலீஸ் நிலையத்திற்கு வந்து புகாரளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.