90ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னி சிவரஞ்சனியா இது? எப்படி இருந்தவங்க இப்டி பரிதாபமா ஆகிட்டாங்க! வைரல் புகைப்படம்!

நடிகை சிவரஞ்சனி அழகு குறைந்து உடல் பருமன் அடைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகை சிவரஞ்சனி 1990-ல் பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர். இவர் நடித்த ராஜதுரை, காத்திருக்க நேரமில்லை, புதியதென்றல் ஆகிய திரைப்படங்கள் தமிழ் மொழியில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தன. இவருடைய அழகில் இவருக்கு நிறைய படங்கள் கிடைத்தன. காலம் செல்ல செல்ல இவருடைய அழகு சற்று குறைய தொடங்கியது. இதனால் இவருடைய பட வாய்ப்புகள் குறைந்தன.

இதனிடையே இவர் மேகா ஸ்ரீகாந்த் என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ரோஷன், ரோஹன் என்ற 2 மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர். 

சமூக வலைதளங்களில் சிவரஞ்சனியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதற்கு நேர்மாறாக தற்போது குண்டாகிவிட்டார். எவ்வளவு பருமனாக அவர் மாறுவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இந்த புகைப்படங்கள் திரையுலகின் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.