நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட சம்பவமானது இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்ற பெண் வழக்கறிஞர்..! யார் இவர் தெரியுமா?
டெல்லியில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்பயா என்ற இளம்பெண் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். திடீரென்று ஒருநாள் இரவன்று பேருந்தில் 4 இளைஞர்கள் நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விவகாரமானது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிர்பயா அடுத்த சில நாட்களில் இறந்து போனார்.
குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டு பிடித்து சிறையில் அடைத்தனர். கடந்த 7 வருடங்களாக இந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்று வருகிறது. பலமுறை கருணை மனுக்களின் மூலம் தங்களுடைய தூக்கு தண்டனை குற்றவாளிகள் தள்ளிப்போட்டு வந்தனர். ஆனாலும் கடைசி கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் இன்று அவர்கள் 4 பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி இன்று அதிகாலை 4 மணி அளவில் குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் நாடு முழுவதிலும் மகிழ்ச்சி அலை பரவி வருகிறது. 7 வருடங்களாக சட்ட போராட்டத்தை சமாளித்து வந்த நிர்பயாவின் ஆதரவு வழக்கறிஞரான "சீமா சம்ரிதி குஷ்வஹாவை" சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.
கடந்த 7 வருடங்களாக, இந்த வழக்கு திசைமாறி போன போதெல்லாம் மனதை தளரவிடாமல் நீதியை பெற்று தருவதில் தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வந்த வழக்கறிஞர் சீமா சம்ரிதி குஷ்வஹாவை அனைவரும் போற்றி புகழ்வதில் எந்தவித ஐயமுமில்லை.
தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், "இது என் மகளுக்கான நீதி அல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்கு கிடைத்த நீதி. எனது நாடு எனக்கு நீதியைப் பெற்று தந்துள்ளது" என்று கண்ணீர் மல்க நிர்பயாவின் தாயார் பேட்டியளித்துள்ளார். இந்த செய்தியானது இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.