விஜய் மாநாடுக்கு மதுரை ரெடி

அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான முடிவுகளை மதுரையில் எடுப்பார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி அரசியலில் கால் பதிக்க இருக்கும் நடிகர் விஜய் வரும் ஜூன் மாதம் அரசியலில் முதல் மாநாடு நடத்துவதாக இருப்பதாகத் தகவல் வருகிறது.


அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான முடிவுகளை மதுரையில் எடுப்பார்கள்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி அரசியலில் கால் பதிக்க இருக்கும் நடிகர் விஜய் வரும் ஜூன் மாதம் அரசியலில் முதல் மாநாடு நடத்துவதாக இருப்பதாகத் தகவல் வருகிறது.

இன்று நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்’ என்று கூறியிருக்கிறார்.

விரைவில் சந்திப்போம் என்று கூறியிருப்பதையே அடுத்த மாதம் மாநாடு என்று அவரது ரசிகர்கள் ஆனந்தமாக பரப்பி வருகிறார்கள். இப்போதே மதுரையில் அதற்கான ஏற்பாடுகளில் ரசிகர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

இதே மதுரையில் ரஜினிகாந்த், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்றவர்களும் முக்கிய நிகழ்ச்சியைத் தொடங்கி சொதப்புன கதை இவர்களுக்குத் தெரியுமா?