நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் திரைப்படத்தின் பொழுது நடிகை அமலா பாலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் த்ரோபேக் புகைப்படமாக பகிர்ந்திருக்கிறார்.
நீ தான் அந்த விஷயத்தில் செம்ம..! அமலா பாலுடன் பழைய புகைப்படத்தை வெளியிட்டு விஷ்ணு சொன்ன தகவல்! அப்ப ஜூவாலா?
கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் அமலாபால் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ராட்சசன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது என்றுதான் கூறவேண்டும்.
கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு நிலவிவரும் நிலையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஆகையால் நடிகர்-நடிகைகள் தங்களுடைய ரசிகர்களை அழகிய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் அமலாபாலுடன் இணைந்து தான் நடித்த ராட்சசன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, ராட்சசன் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. உங்கள் வேலையில் நீங்கள் சிறப்பானவர். அதனால் தொடர்ந்து பணி செய்யுங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள் என்று வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அமலாபால் தன்னுடைய கருத்துக்களையும் கமெண்ட் ஆக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.