நடிகர் தாடி பாலாஜி பற்றி பிரபல செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர் கூறிய ஒரு சில விஷயங்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தாடி பாலாஜியை பற்றி என்ன என்னமோ சொன்னாங்க..! ஆனால் ஒரே சந்திப்பில்..! நெகிழ்ந்து பேசிய பிரபல செய்தி வாசிப்பாளர்!
சமீப காலமாகவே தாடி பாலாஜி அவர்களைப் பற்றி தவறான விதத்தில் பலரும் பேசி வந்தனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா அவர் மீது அளித்த புகார் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நடிகர் தாடி பாலாஜி அதிகமாக குடிப்பவர் மேலும் தன்னை மிகவும் துன்புறுத்துகிறார் எனவும் அவரது மனைவி நித்யா பல புகார்களை அடுக்கி வைத்தார். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தாடிபாலாஜி தன் மனைவி மகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தாடி பாலாஜியை பற்றி மிகவும் மோசமாக பேசும் பலருக்கு மத்தியில் , பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவரும் காயத்ரி கிஷோர் தாடி பாலாஜி தனக்கு செய்த உதவியை பற்றி ஒரு தமிழ் நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது காயத்ரி கிஷோர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகில் உணவு அருந்துவதற்காக நிறுத்தப்பட்ட கார் அதற்கு பின்பு ஸ்டார்ட் ஆகவில்லையாம். இதனால் உதவிக்காக நின்றுகொண்டிருந்த காயத்ரியை நோக்கி தாடி பாலாஜி கார் வந்துள்ளது. அப்போது தாடி பாலாஜி காரின் ஓட்டுநர் காயத்ரியின் வண்டியை சரி செய்வதற்காக முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரமாக அந்த ஓட்டுனர் காயத்ரி அவர்களின் காரை சரி செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அந்த ஓட்டுனரை தாடிபாலாஜி அழைத்துள்ளார். இருந்தாலும் தாடி பாலாஜி தன்னுடைய ஓட்டுநரை அழைத்துக் கொண்டு செல்லப் போகிறார் என்று எண்ணி இருந்தனர் . ஆனால் பாலாஜியோ அந்த ஓட்டுனரை திருப்பி அனுப்பி நீ போய் அவர்களுக்கு உதவி செய் என்று கூறியிருக்கிறார்.
அந்த ஓட்டுனர் கடுமையாக முயற்சித்தும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால் மீண்டும் ஓட்டுனர் தாடி பாலாஜி உடன் காரில் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். புறப்பட்ட கார் சிறிது தூரத்தில் சென்று மீண்டும் காயத்ரி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்துள்ளது. அப்போது காரின் கண்ணாடியை இறக்கி தாடிபாலாஜி காயத்ரியை பார்த்து உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளார்.
அதாவது காயத்ரி யாரென்று தாடிபாலாஜிக்கு தெரியாதாம். மனிதர்களில் ஒருவராக காணப்பட்ட காயத்ரி காக மனதார உதவி செய்யவேண்டும் என்று நினைத்த தாடிபாலாஜி பற்றி பாராட்டியுள்ளார். மேலும் தாடிபாலாஜி செய்த இந்த செய்கையால் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் அந்த பேட்டியில் காயத்ரி கிஷோர் குறிப்பிட்டிருக்கிறார்.