தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.
நான் சூப்பரா இருப்பேன்! அது அவருக்கு தெரியும்! நாக்கை காட்டி சமந்தா சொன்ன விஷயம்!
நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தென்னிந்தியாவின் ரசிகர்களால் கவரக்கூடிய இளம் ஜோடிகள் இவர்கள்தான் என்று கூறினால் அது மிகையாகாது. நடிகை சமந்தா எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடிய ஒரு நடிகையாவார்.
அந்தவகையில் நடிகை சமந்தா தற்போது புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யாவும் இடம்பெற்றுள்ளனர் . ஆனால் நாகசைதன்யா கேமராவை பார்க்காமல் சிறிது தூரமாக சோஃபாவில் அமர்ந்து இருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா தன்னுடைய வாயை குறித்து நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்சனாக , "நான் சூப்பரா இருப்பேன்..அது அவருக்கு தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.
எப்போதும் போல நடிகை சமந்தா பதிவிட்ட இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.