திருமணமாகி 7 வருடம்..! வயது 39..! முதல் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை..!

நடிகை கோயல் மாலிக் மற்றும் நிஸ்பால் சிங் தம்பதியினருக்கு நேற்றைய தினம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.


பெங்காலி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கோயல் மாலிக் ஆவார். நடிகை கோயல் மாலிக் , நிஸ்பால் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 7 வருடங்களுக்கு பிறகு இந்த தம்பதியினருக்கு நேற்றையதினம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இந்த தம்பதியினருக்கு திரைத் துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இது தம்பதியினர் தங்களுடைய அழகிய ஆண் குழந்தையோடு இணைந்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இந்த தம்பதியினர் விரைவில் தங்களுடைய குழந்தையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை கோயல் மாலிக் , தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் டான்ஸ் பங்களா டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் இணைந்து நடுவராக பணியாற்றி வந்த அங்குஷ் ஹஸ்ரா தன்னுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதியினருக்கு கூறியிருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய பதிவில், விரைவில் டான்ஸ் பங்களா டான்ஸ் நிகழ்ச்சியில் தோன்றுமாறு நடிகை கோயல் மாலிக்கை கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை கோயல் தன்னுடைய திரைப்படத் துறையில் மிகுந்த ஆர்வம் செலுத்தக்கூடிய நபர் ஆவார். நட்குரு படத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு நாயகியாக அறிமுகமானார். பந்தன் முதல் மீட்டிங் என்ற திரைப்படம் வரை தன்னுடைய பரிமாணங்களை காண்பித்து இருப்பார் நடிகை கோயல் மாலிக். இதன் மூலம் அவர் தன்னுடைய பல்துறை நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.