தயாரிப்பாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை..! கைவிட்ட பரிதாபம்! கொளுக்கு மொழுக்கு நடிகை எடுத்த திடீர் முடிவு!

தமிழ்,தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை நிகிஷா தனக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மீண்டும் லண்டனுக்கே செல்லப் போவதாக தகவல் வெளியிட்டு இருக்கிறார்.


நடிகை நிகிஷா படேல் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் பிறந்து வளர்ந்தது அனைத்துமே லண்டனில் தான். சினிமா துறையில் இருந்த ஆர்வம் காரணமாக அவர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க துவங்கினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகை நிகிஷா பட்டேல் சினிமா திரைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கினார்.மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை நிகிஷா தமிழில் தலைவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதலில் சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்த இவர் பட வாய்ப்புகள் குறையத் துவங்கியதால் கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆகையால் சினிமாவில் இவர் நிச்சயம் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நடிகையால் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது. ஆகையால் நடிகை நிகிஷா மீண்டும் லண்டனுக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து உள்ளார்.

தற்போது அவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளதாம்அந்தப் படங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் லண்டனுக்கு செல்லப் போவதாக கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் லண்டனில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.