ரூ.14 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் கரன்சிகளை கடத்த எஸ்கார்டாகச் செல்ல நடிகை பூனம் மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோரின் செல்போன் நம்பரை அவரது மேக்கப் ஆர்டிஸ்ட் அவரது அந்த கடத்தல் கும்பல் விசாரணையில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூர்ணா, மியா ஜார்ஜ்! செல்போன் நம்பர்கள்..! ரூ.14 கோடி நகைகள்..! எஸ்கார்டு சர்வீசில் பிரபல நடிகைகள்!?

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷம்னா காசிம் ஆகும். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் பூர்ணா என்ற பெயரில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மற்றும் இவரது பெற்றோர் காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது திருப்புமுனையாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பூர்ணாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்படியாக இருக்கும்பொழுது கும்பல் ஒன்று பூர்ணாவின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு தாங்கள் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மாப்பிள்ளை துபாயில் தங்கம் பிசினஸ் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து நடிகை பூர்ணாவை அவர்கள் பெண் பார்க்க வர உள்ளதாகவும் கூறி உள்ளனர். மிகவும் நல்லவர்கள் போல் அவர்கள் போனில் உரையாடியதை கேட்ட பூர்ணாவின் பெற்றோர் அவர்களை பெண்பார்க்கவும் வரவழைத்துள்ளனர். ஆனால் வீட்டுக்கு வந்த அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் பூர்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பூர்ணா அவர்கள் அளித்த கோழிக்கோடு முகவரியை பற்றி விசாரணை செய்து இருக்கிறார். விசாரணையில் அவர்கள் அளித்த அந்த கோழிக்கோடு முகவரி போலியானது என்று தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் அந்த கும்பலில் இருந்து ஒருவர் பூர்ணாவிற்கு போன் செய்திருக்கிறார்.
போனில் அவர் துபாயில் தாங்கள் செய்துவரும் தொழிலுக்காக ரூபாய். 10 லட்சம் உடனடியாக தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். ஆகையால் உடனடியாக அதை தருமாறும் கேட்டிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணா தன்னுடைய பெற்றோரிடம் கேட்டு பின்னர் தருவதாக கூறி இருக்கிறார். அதற்கு அந்த நபர் மிகவும் அவசரம் என்பதால் பெற்றோரிடம் இதைப் பற்றி கூறாமல் அளிக்குமாறு கேட்டிருக்கிறார். இதன்மூலம் பூர்ணாவுக்கு சந்தேகம் அதிகரித்ததால் போன் செய்த அந்த நபரைப் வீடியோ கால் செய்யுமாறு கூறி இருக்கிறார். அந்த நபர் உடனடியாக போனை கட் செய்திருக்கிறார். பின்னர் பூர்ணா அந்த நம்பருக்கு பல முறை முயற்சித்த போதும் அந்த எண் சுவிட்ச் ஆஃபில் இருந்து உள்ளது.
இதனைத் தொடர்ந்துதான் அந்த கும்பலில் இருந்து மேலும் ஒரு நபர் பூர்ணாவின் பெற்றோருக்கு போன் செய்து உடனடியாக பணம் தர வேண்டும் என்றும் ஒருவேளை பணம் தராவிட்டால் பூர்ணாவின் கரியரை நாசமாக்கி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர் பூர்ணாவின் பெற்றோர், மரட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் பூர்ணாவை மிரட்டி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களது புகைப்படத்தை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினர். இவர்களின் புகைப்படத்தை பார்த்த மாடலிங் செய்து வரும் பெண் ஒருவர் இவர்கள் அனைவரும் தங்கம் கடத்தல் செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.இதுபற்றி இந்த பெண்ணிற்கு எப்படி தெரியும் என்று போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் ஏற்கனவே அந்த மாடலிங் செய்து வந்த பெண்ணை எஸ்கார்டாகச் செல்லும்படி கூறியிருக்கின்றனர். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை அடைத்து வைத்து டார்ச்சர் செய்ததாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பேரையும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்களுக்கு நடிகை பூர்ணாவின் செல்போன் எண்ணை அவரது மேக்கப் ஆர்டிஸ்ட் ஹாரிஸ் என்பவர் தான் வழங்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஹாரிஸ் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூர்ணாவின் செல்போன் எண் மட்டுமல்லாமல் நடிகை மியா ஜார்ஜின் போன் நம்பரையும் அந்த கும்பலுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.