தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாபி சிம்ஹா ஆவார்.
நடிகர் பாபி சிம்ஹா செய்த சேட்டை..! 2வது முறையாக கர்ப்பமான பிரபல நடிகை!
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த உறுமீன் திரைப்படத்தில், பாபி சிம்ஹா நடித்திருந்தார் அப்போது தன்னுடன் நடித்திருந்த நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து வந்தார். இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்ரா என்று பெயரிட்டனர் இந்த தம்பதியினர்.
தற்போது நடிகை ரேஷ்மி மேனன் இரண்டாவது முறையாக மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சொந்த பந்தங்களின் முன்னிலையில் சீமந்த விழா நடைபெற்றுள்ளது. சீமந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரேஷ்மி மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேஷ்மி மேனன் தன்னுடைய திருமணத்திற்கு பின்பு திரைத்துறையை விட்டு விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.