பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான ரியாசென் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய ரியா சென்னா இது? கவர்ச்சி கடலில் நீந்திய போட்டோ சூட்! புகைப்படங்கள் வைரல்!
நடிகை ரியாசென் எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீப காலமாகவே சமூகவலைதளத்தில் அமைதியான சூழலில் இருந்து வந்தார் .
இருப்பினும் அவருக்கு தன்னுடைய ரசிகர்களை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர் ஆவார். இந்நிலையில் தற்போது மீண்டும் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுக்க வந்திருக்கிறார் நடிகை ரியாசென்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரியாசென் பிகினி உடையில் அணிந்திருக்கும் புகைப்படங்களை தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இது மட்டுமில்லாமல் மிகவும் தைரியமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் தன் ரசிகர்களுக்காக பதிவிட்டிருந்தார் நடிகை ரியாசென்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய பதிவை வெளியிட்டிருக்கிறார் இவர். அந்த புதிய பதிவில் அவர் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சியாளராக மாறியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது நடிகை ரியாசென் யோகாசனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். ஆகையால் இவர் தற்போது யோகாவை கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராகவும் ஆசிரியராகவும் மாறியுள்ளதாக கூறியிருக்கிறார்.
இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் நடிகை ரியாசென். இதன் மூலம் தன்னுடைய ரசிகர்களையும் யோகாசனம் செய்ய ஊக்குவிப்பதாக கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் எப்படி ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தன்னுடைய பதிவின் மூலம் ரசிகர்களுக்கு விளக்கியுள்ளார் நடிகை ரியாசென் என்பது குறிப்பிடத்தக்கது.