செக்ஸ் புகார் கூறிய நடிகைகளுக்கு ரூ.300 கோடி! தயாரிப்பாளரின் தாராளம்!

தன் மீது செக்ஸ் புகார் சொன்ன நடிகைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கத் தயாராக உள்ளதாக, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு ஹாலிவுட் படங்களை தயாரித்து வந்த வெய்ன்ஸ்டைன் நிறுவனத்திற்கு, 2017ம் ஆண்டு சோதனையான காலம் என்றே சொல்லலாம். ஆம், ஹாலிவுட் நடிகைகள் பலரும் வரிசையாக, வெய்ன்ஸ்டைன் உரிமையாளர் ஹார்வி மீது செக்ஸ் புகார் அளித்தனர். இதனால், அந்நிறுவனத்தின் தொழிலே முற்றிலும் முடங்கியது. பலரும் வழக்கு தொடர்ந்ததால், பல மில்லியன் டாலர்களை திடீரென செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வெய்ன்ஸ்டைன் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

இதையடுத்து, கடன் சுமையில் சிக்கிய அந்நிறுவனம், லான்டெர்ன் கேபிடல் பார்ட்னர்ஸ்க்கு, மொத்த பங்குகளையும் விற்றுவிட்டது. இதன்பின், நிறுவனத்தின் மீதும், ஹார்வி மீதும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நஷ்ட ஈடு அளித்து, வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் பணியில் வெய்ன்ஸ்டைன் தரப்பு வழக்கறிஞர்கள்,  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இதன்பேரில், வழக்கு தொடர்ந்த பலரும் ரூ.300 கோடி வழங்கும் தங்கள் டீலை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம் எனவும், வெய்ன்ஸ்டைன் தரப்பு வழக்கறிஞர்கள், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நியூயார்க் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்துள்ளனர். 

எப்படி இருந்தும், ஹார்வி வெய்ன்ஸ்டைன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றே சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.