இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பட்டாணி ஆகியோர் தங்களுடைய புதிய திரைப்படத்திற்காக நீருக்கடியில் நடிப்பதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் .
கடலுக்கு அடியில் சென்று கிளுகிளு ஒத்திகை பார்க்கும் பிரபல நடிகர் - இளம் நடிகை..! எதற்கு தெரியுமா?
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆதித்யா ராய் கபூர் முதல் முறையாக நடிகை திஷா பட்டானியுடன் இணைந்து மலங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் நீருக்கடியில் இருக்கும் விதமான காட்சிகளை அமைக்கும் நோக்கில் திரைப்படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திஷா பட்டாணியும் நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் இணைந்து நீருக்கடியில் முத்தக்காட்சியில் நடிப்பதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை திஷா பட்டானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கடலுக்கு அடியில் திஷா பட்டாணியும் ஆதித்யா ராய் கபூரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான தீவிர பயிற்சியை அளிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மலங் திரைப்படம் வரும் புதிய ஆண்டில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.