ராமநாதபுரம் அதிமுகவில் மிக முக்கியமான நபராக கருதப்படும் அன்வர் ராஜா நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை திமுகவில் இணைகிறார் ராமநாதபுரம் அதிமுக பெருந்தலை அன்வர் ராஜா! எடப்பாடிக்கு டாடா..!
2014 முதல் 2019ம் ஆண்டு வரை ராமநாதபுரம் அதிமுக எம்பியாக இருந்தவர் அன்வர் ராஜா. இவர் தமிழ்நாடு வக்பு போர்டிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் அன்வர் ராஜா இருந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அன்வர் ராஜா ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த தொகுதியை பாஜகவிற்கு அதிமுக தாரை வார்த்தது. அதன் பிறகு மாநிலங்களவை எம்பி பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் அன்வர் ராஜாவுக்கு அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும் அண்மையில் கட்சிப் பொறுப்புகளில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அதிமுகவிற்கு குட்பை சொல்ல அன்வர் ராஜா தயாராகிவிட்டாராம்.
திமுகவில் மாநில அளவில் பொறுப்பு என்கிற வாக்குறுதியுடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்கிற நம்பிக்கையுடனும் நாளை ஸ்டாலினை அன்வர் ராஜா சந்திக்க உள்ளர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.