நானும் உங்க ரசிகன் தான்! மேடையில் இருந்த ரஜினியை நெகிழ வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

கதாசிரியர் கலைஞானதிற்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "நானும் உங்கள் ரசிகன் தான் " என்று சூப்பர் ஸ்டாரை பார்த்து கூறினார்.


புகழ்பெற்ற  கதாசிரியரான கலைஞானம் அவர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் கதாசிரியர் பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் வருகை தந்திருந்தார்.

இந்த கால கதாசிரியர்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளவர்தான் கலைஞானம். இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பைரவி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார் மேலும் இவர் ஒரு சிறந்த நடிகரும் கதாசிரியரும் ஆவார்.

இது மட்டுமில்லாமல் புதுப்பட்டி பொன்னுத்தாயி, நெல்லிக்கனி, நீதிக்கு ஒரு பெண் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

இத்தகைய வெற்றிகளை சந்தித்த கலை ஞானத்திற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பாராட்டு விழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். 

இந்த விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில் ஆசிரியர்களே நாம் எப்போதும் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் வாடகை வீட்டில் வசித்து வரும் கலைஞானம் அவர்களுக்கு நான் புதியதாக வீடு வாங்கி தர போகிறேன் என்றும் கூறினார். 

ரஜினியை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். அப்போது பேசிய அவர் கலைஞானம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய பாரதிராஜாவை  மிகவும் பாராட்டினார்.

இதற்குப் பின் மேடையில் அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டாரை பார்த்து நானும் உங்கள் ரசிகர் தான் உங்கள் திரைப்படங்கள் அனைத்தையும் நான் பார்ப்பேன் என்று கூறினார் . சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நீங்கள் மட்டும்தான் உரியவர்  எனவும் கூறினார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

இதற்குப்பின்  திரையுலகின் சார்பில் தமிழக அரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவை அனைத்தும் கூடிய விரைவில் பூர்த்தி செய்து தரப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு  அந்த மேடையில் கூறினார்.