மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த தம்பியை அண்ணனே கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
உன்னை வீட்டுக்குள் விட்டதே தப்பு..! அண்ணன் மனைவியை காதலியாக்கிய தம்பிக்கு ஏற்பட்ட பயங்கரம்! நத்தம் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளிப்பட்டியில் ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி சின்னம்மாள் வசித்து வந்தனர். திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனிச்சாமி ஜெயராஜின் தம்பி. இவர் அண்ணன் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஜெயராஜின் மனைவி சின்னம்மாளுக்கும் பழனிசாமிக்கு முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தது தெரியவர, இதை மனைவியையும், பழனிசாமியையும் ஜெயராஜ் கண்டித்தார். பிரச்சனை பெரிதாகவே சின்னம்மாள் ஆத்திரம் அடைந்து தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதற்கு தம்பியே காரணம் என ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் பிடாரப்பட்டிக்கு சென்று பழனிச்சாமியிடம் தகராரில் ஈடுபட்டு அவரை அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.
அரிவாள் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பழனிச்சாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வழக்குப்பதிந்த போலீசார் ஜெயராஜை தேடி வந்தனர். இந்நிலையில் ஜெயராஜ் வடமதுரை போலீசில் சரணடைந்தார்.