குழந்தைக்கு ஊர்களின் பெயரை, பேராக வைக்கலாமா..? என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ.

மனிதர்களுக்கு மண் மீதும் தான் பிறந்த சொந்த ஊரும் தனது உயிரைக்கு நிகராக எண்ணுவார்கள் இவையாவும் அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும் வெளியூர் வெளிநாடுகளில் மற்றவர்களிடம் பழுகும் போது உடனே உங்கள் சொந்த ஊர் எது என கேட்டு தெரிந்து கொள்வார்கள் எனில் ஒரே ஊர் என்றால் ஊர் பாசம் மண் பாசம் மிகுதியான நம்பிக்கை பாசம் வைப்பார்கள் இதன் காரணமாகவே சிலர் ஊர் பெயரை தன் பெயரை சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.


சிலரை தங்களது பெயரை சொல்வதைவிட இந்த ஊர்காரன் என்றால் உடனே அடையாளம் தெரிந்துவிடும் ஒருவரது பெயரை பற்றி கூட தெரியாதவர்கள் அவர்களது ஊரை உடனே தெரிந்து வைத்து இருப்பார்கள்

இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும் இது பொருந்தும் வெறும் முருகன் என்றால் சட்டென்று நினைவுக்கு வராது பழனி முருகன், திருச்செந்தூர் முருகன், மருதமலை முருகன், எனவும் மதுரை மீனாட்சி மதுரை சொக்கநாதர் எனவும் சிதம்பரம் நடராஜர் எனவும் காஞ்சி காமாட்சி இப்படி தெய்வங்களுக்கு கூட ஊர் பெயர் சொல்லி சொன்னால் தான் உடனே தெய்வத்தின் நினைவு வரும் இது போல்ல சங்கீத வித்துவான்கள் தங்களது ஊர் பெயரை அடைமொழியாக வைத்து தான் தங்களது பெயரை குறிப்பிடுவார்கள்.

அதன்படி பாலக்காடு மாதவன், குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், செம்மங்குடிசீனிவாசன் இப்படி பலர் தங்களது ஊர் பெயர் அடையாளத்தோடு இருப்பவர்களை நாம் காண முடிகிறது.இவ்வாறு ஊர் பெயர் எல்லோருக்கும் பொருந்தி வருவதில்லை ஒரு சிலர்க்கு மட்டுமே ஊர் பெயர் இணைந்து வரும். சொந்த ஊர் பெயருடன் தன் பெயர்க்கு புகழ் தேடி தருவதில் ஒரு கெத்து இருக்க தான் செய்கிறது.

பொதுவாக பொது வாழ்வில் இருப்பவர்கள் பொது மக்களுக்கு பொதுவாக இருப்பவர்கள் தங்களது ஊர் பெயரை சேர்த்து தன்னை அடையாளம் காட்ட விரும்ப மாட்டார்கள் அவர்களது விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் ?தங்களது ஊர் பெயர் தானாக சேர்ந்து விடும் இதனை தவிர்க்கவே முடியாமல் போய் விடும்.எது எப்படி இருந்தாலும் ஊர் பெயர் உடன் தன் பெயரை சேர்த்து வாழ்வது பெருமையாக இருந்தாலும் ஜோதிட ரீதியாக இவர்களது பெயர்களில் ஊர் பெயர் சேர்த்து வருவதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்

ஊர் பெயர் என்பது இடத்தை பற்றி குறிக்கும் சொல்லுக்கு அதிபதி செவ்வாய் தான். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல வலிமையோடு இருந்தால் தான் அவரது பெயரில் ஊர் பெயர் சேர்ந்து வரும் செவ்வாய் தயவு இன்றி ஊர் பெயர் இணைந்து வர முடியாது. ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஊர் பெயர் சேர்ந்து வரலாம்.

செவ்வாய் தோஷமாக இருந்தாலும் செவ்வாய் வலுவாக இருந்தால் ஊர் பெயரை சேர்த்து கொள்ளலாம் மேலும் செவ்வாய் குருவுடன் அல்லது செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலும் ஊர் பெயர் சேர்ந்து வரக்கூடும். சூரியன் நின்ற பாவத்தில் இருந்து 4 7, 10ம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் பத்து பேர்க்கு ஊர் தெரிந்த நபராக வாழ்வார்.

மேலும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக வாழ செவ்வாய் துணை செய்வதுடன் ஊர் பெயரே ஒரு அடையாள பெயராக வருவதற்கு ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு காரகமாக உள்ளது என்பதை பிரபலமானவர்களின் ஜாதகங்களே ஒரு உதாரணமாகும்.

கணித்தவர்

ஜோதிட பிரம்மம் : சூரியநாராயணமூர்த்தி

ஈரோடு -_ 638 001

செல் :- 9443923665 & 9865065849