ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களின் இறுதி பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!
தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களுக்கு மட்டும் வருகிற டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது.
3,02,994 வேட்பாளர்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை பெற்ற பின்பு தேர்தல் ஆணையம் அந்த மனுக்களை பரிசீலனை செய்தது. அவற்றை பரிசோதனை செய்த போது அதில் இருந்து 3,643 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தாகம் தேர்தல் ஆணையம் கூறுகிறது . மேலும் 48,891 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
ஆகையால் நடைபெற போகும் உள்ளாட்சி தேர்தலில் 73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு, 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2,605 பேரும், கிராம வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு ஒரு லட்சத்து 70,898 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 35,611 வேட்பாளர்கள் போட்டியிட தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.