ஸ்கூல் முடிந்து வீடு திரும்பிய 3 மாணவிகள்! எதிரே அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய கார்! நெஞ்சை பதறச் செய்த சம்பவம்! எங்கு தெரியுமா?

அதிவேகத்தில் சென்ற கார் மோதியதில் 3 மாணவிகள் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் ஆலப்புழா எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பூச்சக்கல் என்னும் பகுதியில் வெள்ளை நிற கார் ஒன்று நேற்று பிற்பகலில் அசுர வேகத்தில் சென்றுள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய கார் முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. அந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பேரும் தூக்கி அடிக்கப்பட்டனர்.

இந்த மோதலுக்கு பிறகும் கார் அதே வேகத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவிகள் மீது கார் மோதியது. மோதி அதிர்ச்சியில் மூவரும் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மாணவிகளை விட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவ்விரு மோதலகளுக்குபக்ஷ பிறகும் சிறிது தூரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்து முழுவதிலும் மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே,  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது காரை ஓட்டி வந்தவர் மனோஜ் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனந்த் என்ற அசாம் மாநிலத்தை சேர்ந்தவரும் காரில் உடன் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.