6 முறை கருச்சிதைவு! தவமாய் தவமிருந்த பிறந்த குழந்தை! சிறு கவனக்குறைவு! பிறகு நேர்ந்த பரிதாபம்! கதறி அழும் தாய்!

6 கருச்சிதைவுக்கு பிறகு பிறந்த குழந்தை பணிப்பெண்ணின் அஜாக்கிரதையால் இறந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சக்கரி ஹஷேம் என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் டெமி. இவ்விருவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் பல ஆண்டுகளாக குழந்தையின்றி தவித்து வந்தனர்.

டெமிக்கு 6 முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அனைத்து போராட்டங்களுக்கு பிறகு "ஜரியா" என்ற அழகான பெண் குழந்தையை டெமி பெற்றெடுத்தார். இதனால் இவர்களுடைய குடும்ப உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் டம்மி ப்ரூக்ஸ் என்ற 40 வயது பணிப்பெண்ணை குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக நியமித்திருந்தனர். நேற்று குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்ற டம்மி குழந்தையை காரிலிருந்து இறக்கி விட மறந்து விட்டார்.

அதன்பின் டம்மி வேலைக்கு சென்றுவிட்டார் சுமார் 1:30 மணியளவிற்கு டம்மிக்கு இதுகுறித்து நினைவு வந்துள்ளது.உடனடியாக அவர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காரின் கண்ணாடிகளை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்து கிடந்தது. 30 டிகிரி செல்சியஸில் காருக்குள்ளேயே இருந்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.இந்த சம்பவத்தில் டம்மியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை பரிதவித்து இறந்துபோன சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.