சென்னையில் 2வது நபரை தாக்கியது கொரோனா..! சூப்பர் மார்க்கெட்டுகளில் திரளும் மக்கள் கூட்டம்! ஏன் தெரியுமா?

சென்னையில் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.


டெல்லியில் இருந்து சென்னை வந்த 20 வயது நபர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஒன்றாக இருக்கும் போதே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே சமயம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றனர். மால்கள், திரையரங்குகள் மட்டுமே அடைக்கப்பட்டன. ஆனால் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் காய்கறி கடைகள் செயல்படாது என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் 2வது நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி படையெடுக்கின்றனர். வீட்டிற்கு தேவையான பொருட்களை அதிகம் வாங்கி குவிக்க அவர்கள் கடைகளை முற்றுகையிட்டுள்ளனர்.

ஒருவேலை கொரானா பீதியால் கடைகள் அடைக்கப்பட்டால் வீட்டில் பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று கருதி முன்கூட்டியே மக்கள் கடைகளில் வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்னையில் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.