லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கோவை கிங்ஸ் அணியை வெளுத்து வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்! புள்ளிப் பட்டியலில் டாப்!
முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி , எதிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது .
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் ஹரிஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியின் கோபிநாத் சிறப்பாக விளையாடி 82 ரன்களை குவித்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் . இதனால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது .