ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த குழந்தையை பொதுமக்கள் லாவகமாக மீட்டெடுத்த சம்பவமானது லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் முனகல்..! துடிதுடித்த 2 கால்கள்..!தோண்டிப்பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ. இதற்கு உட்பட்ட சித்தார்த் நகர் மாவட்டத்தில் சொனோரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது லக்னோவில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. சாதாரணமாக எடுத்துக்கொண்ட பொதுமக்கள், பின்னர் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்கும் திசை நோக்கி சென்றனர்.
கட்டுமானப்பணி நடந்து வந்த பகுதிக்கு அருகே இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையின் சத்தம் வருவதை கண்டறிந்தனர். உடனடியாக பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மணலை தோண்டினர். அவ்வாறு தோண்டப்பட்டதில் அந்த குழந்தையின் கால் வெளியே தெரிந்துள்ளது.
பொறுமையாக செயல்பட்ட பொதுமக்கள் குழந்தையின் காலைப்பிடித்து அதனை வெளியே எடுத்தனர். வெளியே எடுத்த பின்னர் உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் இருப்பினும் மணலை அதிகளவில் உட்கொண்டிருக்கலாம் என்பதால் பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.