விழுப்புரம் வீட்டுக்குள் அழுகிய நிலையில் 4 சடலங்கள்! கதவை திறந்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் குயிலாப்பாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சுந்தர மூர்த்தி என்பவர் தீபாவளி சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். இவருடைய உறவினர்கள் இவரை 3 நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது அவர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்நிலையில் அவருக்கு என்ன ஆனது என்று பதறிப்போய் நேரில் சென்றுள்ளனர்.

சுந்தரமூர்த்தியின் அக்கம்பக்கத்தினரிடம் உறவினர்கள் கேட்டபோது 3 நாட்களாக வீடு பூட்டியே இருந்ததாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கியவாரும், அவருடைய மனைவி மற்றும் மகன்கள் சடலங்களாக கீழேயிருந்தனர்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சீட்டு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சுந்தரமூர்த்தி தன்னுடைய குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது குயிலாப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.