பட்டப்பகலில் கல்லூரி மாணவர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச் பிரேக்! கல்லூரி வாசலில் வெட்டி பொலி போடப்பட்ட 3ம் ஆண்டு மாணவன்! தூத்துக்குடி பதற்றம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சந்தையடியூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனின் பெயர் அபிமன்யு. சந்தையடியூருக்கு அருகே அமைந்துள்ள செய்துங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று மதியம் வழக்கம் போல மதிய உணவிற்காக அபிமன்யு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை சுற்றி 4 இருசக்கர வாகனங்கள் வழிமறித்தன. வாகனங்களிலிருந்து தங்களிடமிருந்த அரிவாளால் அபிமன்யுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அபிமன்யு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அபிமன்யுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.