மதுரையை சேர்ந்த தம்பதியினர் தங்களுடைய மகனுக்கு "தல அஜித்" என்று பெயரிட்டுள்ளனர் .
மகனுக்கு பெயர் தல அஜித்..! மகளுக்கு பெயர் அஜித்தா..! பெயர் சூட்டுவதில் நெகிழ வைத்த மதுரை காதல் தம்பதி!
பொதுவாகவே சினிமா நடிகர்களின் பெயர்களை ரசிகர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கம்தான். ஆனால் மதுரையில் ஒரு தம்பதியினர் சினிமா நடிகரின் பெயருடன் அவரது அடைமொழியும் சேர்த்து தன்னுடைய மகனுக்கு பெயராக வைத்துள்ளனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன்-ஜோதிலட்சுமி தம்பதியினர் .
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இவர்களிருவரும் தீவிரமான நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ஆவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன . அதில் ஒரு ஆண்குழந்தை கடந்த 2013ஆம் ஆண்டு பிறந்துள்ளது . அப்போது அந்த குழந்தைக்கு " தல அஜித்" என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தற்போது தல அஜித் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகளுக்கு அஜித்தா என்றும் பெயரிட்டுள்ளனர். தற்போது தல அஜித் - இன் எல்கேஜி வகுப்பின் ஐடி கார்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த சிறுவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது ஆதார் கார்ட் மற்றும் முக்கியமான அரசு ஆவணங்கள் அனைத்திலும் தல அஜித் என்றுதான் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இவ்வாறு செய்தீர்கள் என்று மதுரைவீரன் இடம் கேட்டபொழுது , அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்னைபோல் என் மனைவியும் தீவிர ரசிகை . அவர் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல விதமான உதவிகளையும் செய்து வருகிறார் . மேலும் அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாது சிறந்த கார் ரேசர் , பைக் ரைடர் , மோட்டார் மெக்கானிக் ஆவார்.
நடிகர் அஜீத் அவரது வாழ்வில் ஏற்பட்ட பல தடைகளையும் சோகங்களையும் தோல்விகளையும் மீறி தற்போது மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் . அவரைப்போல் என்னுடைய குழந்தைகளும் வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரை என் குழந்தைகளுக்கும் சூட்டி இருக்கிறேன் என்று கூறினார் மதுரை வீரன்.