திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடிகர் ரஜினி மற்றும் கமல் உடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக் கூறியுள்ளார்.
ரஜினி கமலுடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டுகிறார் முக ஸ்டாலின்! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!
காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நலம் விசாரிப்பதற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இது பற்றி பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடிகர் கமல் மற்றும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருகிறார் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக 18 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது.
அதிமுக 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றது. இதனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக ரஜினி மற்றும் கமல் உடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டம் தீட்டுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.