ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனை தீயணைப்பு துறையினர் போராடி மீட்ட உள்ள சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட தந்தை! மகன்! உயிரை கொடுத்து காப்பாற்றிய தீயணைப்பு துறை! நெகிழ்ச்சி சம்பவம்!
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்னுமிடம் அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆற்றுப்படுகைகளில் மக்கள் கொண்டாடினர். பட்லூர் காவிரி ஆற்றிலும் மக்கள் நேற்று கொண்டாடினர்.
ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவருக்கு 9 வயது மதிக்கத்தக்க மகன் உள்ளார். இவருடைய பெயர் கிருஷ்ணன். இவர்கள் இருவரும் ஆற்றுப்படுகையில் எதிர்பாராவிதமாக அடித்து செல்லப்பட்டனர். இவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதை பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படைவீரரான மோகன் கண்டுள்ளார்.
மோகன், இறையமங்கலம் பகுதியில் ஈடுபட்டிருந்த தன்னுடைய சக மீட்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். எந்த ஒரு முன் எச்சரிக்கையுமின்றி ஆற்றில் குதித்தார். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாற்று தத்தளித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகனை காப்பாற்றினர்.
அவர்களை ஆற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தபோது பேச்சு மூச்சின்றி கிடந்தனர். சிறுவன் கிருஷ்ணன் எந்த வித அசைவும் இன்றி மயங்கிக் கிடந்தார். தீயணைப்பு வீரர்களுள் ஒருவர் வாயோடு வாய் வைத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தார். சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் கண் விழித்துக்கொண்டனர்.
உடனே அவர்களை தீயணைப்பு வண்டியில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் தந்தை மற்றும் மகன் நலமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு படையினரின் இந்த செயலானது அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.