தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.
ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா? இன்னும் குறையுமா?
கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இந்த மாதம் 1ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் விலையானது 31 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது.
நவம்பர் மாதம் 3 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,944 ஆக இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் ரூ. 696/- குறைந்து இன்று ரூ.30248/- க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் நவம்பர் 4ம் தேதி 1517 டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 1456 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட 61 டாலர் கடந்த 8 நாட்களில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,799 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,392 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,636 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,088 ஆகவும் இருந்தது.
ஆனால் இன்று சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,618 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,944 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,781 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,248 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
12.11.2019 - 1 grm – Rs. 3781/-, 8 grm – 30,248/- ( 24 கேரட்)
12.11.2019 – 1 grm – Rs. 3618/-, 8 grm – 28,944/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.50 ஆகவும் கிலோ ரூ.47,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..