கள்ளக் காதல் செய்பவர்களை தண்டிக்க கூடாது! அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட பகீர் உத்தரவு!

தகாத உறவுக்காக, அரசு ஊழியர்கள் மீது, துறை ரீதியாக, எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கும், ஒரு ஆண் போலீஸ் அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்தது. இது பற்றிய புகாரின் அடிப்படையில், இருவர்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை எதிர்த்து, இருவரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை, நீதிபதி, சர்மா முன்னிலையில் நடந்தது,

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் தான், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றார்.இதன்பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தகாத உறவு வைத்துள்ளனர் என்பதற்காக, அரசு ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. இவர்களின் கள்ள உறவால் பாதிக்கப்பட்டவர்கள்,

அவர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தீர்வு காணலாம்.எது முறைகேடான வாழ்க்கை என்பது, விவாதத்துக்குட்பட்ட கேள்வி. தகாத உறவு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.அதனால், மனுதாரர்கள்மீது, தகாத உறவுக்காக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.