மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

இன்று மூக்குக் கண்ணாடி போடுவது அழகுக்கு என்றே பலர் நினைக்கிறார்கள். தவறான மூக்குக் கண்ணாடி போடுவது கண்ணுக்குக் கெடுதல் உண்டாக்கும். அதேபோல் கண்ணுக்குள் லென்ஸ் போடுவதும் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு நல்லது அல்ல.


ஏதாவது விசேஷ தினங்களில் கண்ணாடி அணிவது தொந்தரவாக இருக்கும்பட்சத்தில் அன்று மட்டும் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். மற்ற நேரங்களில் எல்லாம் கண்ணாடிதான் நல்லது. சரியான கண்ணாடி எப்படி தேர்வு செய்வது என்பதைப் பார்க்கலாம்.

கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும்லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப்பிடித்திருக்கும்படி இருக்க வேண்டும்.

 மூக்கில் படியும் பகுதி பிரேமுடன் நன்கு பொருந்தி கச்சிதமாக இருக்க வேண்டும்காண்டாக்ட் லென்ஸ்அணிபவர்கள்மூக்குக் கண்ணாடியும் ஒன்று எப்போதும் வைத்திருப்பது நல்லது.