கூட்டணித் தலைவர்களிடம் கெஞ்சிய ஸ்டாலின்... என்ன காரணம் தெரியுமா..?

எப்படியாவது பணத்தைக் கொடுத்தாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் பிளான். அதனை உடைத்துக்கட்டும் வகையில்தான், தமிழகம் முழுக்கவே வருமான வரித்துறை வேட்டையாடி வருகிறது.


குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் சென்னை நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

செந்தாமரை கணவர் சபரீசன்தான் திமுகவின் பிரசாரத்துக்கான நிதி விவகாரங்களைக் கையாள்பவர். இந்த நிலையில் கடைசி நேர பட்டுவாடாவுக்கு சபரீசன் டீம் தயாராகி வருவதாக கிடைத்துள்ள தகவலைத் தொடர்ந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடியை மேற்கொண்டனர்.

இது குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியானதில் திமுகவின் இமேஜ், மக்களிடையே மேலும் டேமேஜ் ஆனது. சோதனை குறித்த தகவல் பிரசாரத்தில் இருந்த ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவர் செம ஷாக்காகி உள்ளார். கோபத்தில் அருகில்

இருந்தவர்களிடம் கத்தித் தீர்த்த ஸ்டாலின், பின்னர் விரக்தியுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு போனை போட்டு அறிக்கை விடுமாறு கெஞ்சினாராம். இதனையடுத்தே காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர்கள் ரெய்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வருமானவரித் துறையினரின் இந்த சோதனை திமுக போட்டு வைத்திருந்த பட்டுவாடா திட்டங்களையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.