முதல்வரும் துணை முதல்வரும் எங்கே போட்டி போடப்போறாங்க தெரியுமா..? பட்டியல் இதோ..

இதோ, இன்னமும் இரண்டே மாதங்களில் தமிழகத் தேர்தல் நடைபெறப் போகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.


ஆகவே, இப்போது தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் மும்முரம் காட்டி வராங்க. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இப்போதே பல சுற்று பிரசாரங்களை முடிச்சுட்டாங்க.

இந்த நிலையில் இன்று தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் விருப்ப மனு படிவம் கொடுப்பதை தொடங்கிவைத்தார். அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களுடைய விருப்ப மனுவை கொடுத்திருக்காங்க.

இதற்கான கட்டணமாக 15 ஆயிரம் ரூபாயும் செலுத்திருக்காங்க. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் விருப்ப மனு வழங்கினர். முதல்வரும், துணை முதல்வரும் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்களும் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்கள்.

இன்று அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை வைத்துப் பார்க்கும்போது, அ.தி..மு.க.வின் முதல் பட்டியல் தயார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்படி, இன்று யாரெல்லாம் விருப்பமனு கொடுத்தார்கள், எந்த தொகுதிக்குக் கொடுத்தார்கள் என்பதையும் பார்க்கலாம்.

வழக்கம்போல், எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஏற்கனவே வெற்றி பெற்ற போடிநாயக்கனூரில் ஒபிஎஸ்ஸும் நிற்கிறார்கள். இது தவிர, திண்டுக்கலில் - சீனிவாசன், கோபியில் - செங்கோட்டையன், 

குமாரபாளையத்தில் - அமைச்சர் தங்கமணி, தொண்டாமுத்தூரில் - வேலுமணி ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.