மருத்துவமனையில் பெண் மருத்துவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞனை செருப்பால் அடித்த சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் நடுத்தர வயது பெண்ணின் உடலில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞன்..! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்! வேலூர் பரபர!
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை என்ற இடம் அமைந்துள்ளது. இங்குதான் வேலூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. எப்பொழுதுமே நோயாளிகள் அவர்கள் உறவினர்கள் என்று இந்த மருத்துவமனை வளாகங்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள பிரசவ வார்டுக்கு அருகே சம்பவத்தன்று கிட்டத்தட்ட 40 பேர் இருந்துள்ளனர்.
அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை தந்து வந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண் மருத்துவரையே நோட்டமிட்டு வந்துள்ளார். யாரும் எதிர்பாராதவாறு அந்த இளைஞர் பெண் மருத்துவருடன் தகாத முறையில் நடந்துக்கொண்டார்.
பதறிப்போன அந்த பெண் மருத்துவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். உடனடியாக தன் காலில் இருந்த செருப்பை கழட்டி அந்த இளைஞரை சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்த காவலர்களிடம் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள இணைந்து முயற்சித்ததாக கூறி ஒப்படைத்துள்ளார்.
உடனடியாக காவலர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் இளைஞரை ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் பரசுராமன் என்பதும் கண்ணமங்கலம் அடுத்த கம்பத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.