தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
எடப்பாடியின் ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 9000 லிட்டர் தண்ணீர்! தலை சுற்ற வைத்த தகவல்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_6429_1_medium_thumb.jpg)
இந்நிலையில் தமிழக முதல்வரின் வீட்டுக்கு மட்டும் தினமும் மூன்று வேளைகளில் மொத்தம் 9000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது என கேள்விப்பட்ட மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சில நாட்களாகவே சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகமாகவே உள்ளது. ஏரிகள் மற்றும் குளங்கள் வற்றிய நிலையில் லாரிகளில் மட்டுமே குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சத்தை போக்க பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் சார்ந்த தொழிற்சாலைகள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் பல பகுதிகளில் நீண்ட தூரம் சென்று ஊற்று மூலம் நீர் அழைத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து நகரங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பொதுவாகவே இரவு நேரங்களில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிப்பதால் வேலைக்குச் சென்று வந்து இரவில் தூங்குபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பல்வேறு திட்டங்களை ஏற்படுத்த உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை எனவும் மீடியாக்கள் தவறாக தகவலை பரப்பி வருகின்றன எனவும் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போதும் 'டைம்ஸ் நவ்' சேனல் எடுத்த பேட்டியில் தண்ணீர் லாரி ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது, தினமும் காலை மதியம் மாலை வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சுமார் 9000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியைக் கேட்ட பொது மக்கள் முதல்வரின் வீட்டுக்கு மட்டுமே இவ்வளவு தண்ணீர் அனுப்பிவிட்டால் பொதுமக்கள் நாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.