இரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் ஒவ்வொரு முடிவை சொல்கின்றன. ஆனால் கள நிலவரம் எப்படி இருக்கிறது? மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு தரப்பினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் என்ன தெரியுமா?


தெற்கை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிமுக வலுவான நிலையில் உள்ளது. வடக்கு, மேற்கு, கொங்கு டெல்டா மண்டலங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இரட்டை இலை முன்னிலை வகிக்கிறது. தமிழக அரசின் நலத்திட்டங்கள், பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் என பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.

ஆர்ப்பாட்டம் இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எளிய பிரச்சாரம் கூடுதல் பிளஸ் பாயிண்ட். அத்துடன் கோஷ்டி பூசலுக்கு இடமின்றி அதிமுகவினர் ஒற்றுமையாக உழைப்பது இரட்டை இலையை உயரச் செய்திருக்கிறது.

இந்த ஒற்றுமையை திமுக அணியில் பார்க்க முடியவில்லை. சொந்த கட்சிக்குள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுடனும் திமுகவினர் குஸ்திபோடும் நிலைதான் காணப்படுகிறது. ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி போன்ற திமுகவினரின் ஆபாச பேச்சுக்களால் திமுகவிற்கு கிடைக்க வேண்டிய பெண்கள் வாக்குகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஸ்டாலின் மகள், எ.வ.வேலு உள்ளிட்ட திமுகவினரின் வீடுகளில் நடைபெற்ற ரெய்டுகள் அந்த கட்சியின் இமேஜை அடியோடு டேமேஜ் செய்துள்ளது. ஆக மொத்தத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அணி ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.