நான் முதல்வர் பதவி வாங்ககியது எப்படி தெரியுமா..? ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்த எடப்பாடியார்.

தேர்தல் நெருக்கத்தில் நேரடியாக போட்டியை சமாளிக்க முடியாதவர்கள், தரம் தாழ்ந்து இறங்கி பேசுவது இயல்புதான். அப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


குறிப்பாக. முதல்வர் பழனிசாமி ஊர்ந்து சென்றுதான் பதவி வாங்கினார் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

இந்நிலையில் கடலூர் புவனகிரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “ஜெயலலிதா இறந்துவிட்டார் .கட்சி உடைந்து போகும் .ஆட்சி மாறி விடும் என்று எண்ணி இருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு விவசாயி வருவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.நான் தமிழக மக்களின் ஆசியுடன் இந்த பதவியில் இருக்கிறேன்.

ஸ்டாலின் அவர்களே, நான் ஊர்ந்து போய் பதவியை வாங்கவில்லை; நடந்துபோய் தான் பதவி வாங்கினேன்.ஊர்ந்து செல்ல நான் பல்லியா? பாம்பா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டு வந்தது திமுக. ஆனால் அவர்கள் குறை கூறுவது அதிமுகவை தான். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கையெழுத்திட்டார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே பல்டி அடித்து விட்டனர்.

இதைக் கொண்டு வந்தது திமுக ; போராட்டம் செய்வதும் திமுக; யாரை ஏமாற்ற இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.பழைய காலம் மாதிரி விவசாயியை ஏமாற்றி ஓட்டு வாங்கி விடலாம் என்று எண்ணி விடாதே..!” என்றார்.

சரியான பதிலடிதான்.