கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. அதன்பிறாகு இதுவரையில் திறக்கப்படவில்லை. மேலும், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி… எடப்பாடியார் அரசு அடுத்த அறிவிப்பு.
இப்போது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவது அரசின் கவனத்துக்குப் போயிருக்கிறது.
எனவே, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பை கம்ப்யூட்டர் மூலம் நடத்திவரும் தனியார் பள்ளிகள் அப்படியே தேர்வும் நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போது பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு நல்ல யோகம்தான்.