காதலன் திடீர் மரணம்! தவிப்பில் பிரபல நடிகரின் மகள் செய்த செயல்! உருக வைத்த நிகழ்வு!

பிரபல பாலிவுட் நடிகரின் மகளான திரிஷாலா தத்தின் காதலர் பிறந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர் நடித்த பல்வேறு பாலிவுட் திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பெயர் திரிஷாலா தத். இவருக்கு இத்தாலி நாட்டை சேர்ந்த காதலர் ஒருவர் உள்ளார். யாரும் எதிர்பாராவிதமாக இவரின் காதலர் 2-ஆம் தேதியன்று இறந்துள்ளார்.

அவர் இறந்த செய்தியை மிகுந்த துக்கத்தோடு திரிஷாலா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.  "என்னை காதலித்ததற்கு மிகவும் நன்றி. இவ்வளவும் நாட்களாக என்னை அன்புடன் நேசிபத்ததற்கும், பாதுகாபத்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வுலகில் என்னை மிகவும் சந்தோஷப்பட வைத்தீர்கள். உங்களை இவ்வுலகில் நேசித்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன். 

நீங்கள் எப்பொழுதும் என்னுள் இருப்பீர்கள். மீண்டும் சந்திக்கும் வரை, அன்புடன் உங்கள் காதலி" என்று பதிவு செய்திருந்தார். இதனை படித்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை தேற்றி வருகின்றனர். திரிஷாலா தன் காதலனை இழந்த துக்கத்தில் வாலிபரும் சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.