புற்று நோய்க்கு பலியான மனைவி! கதறும் திரையுலக பிரபலம்! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

மலையாள பாடகரான பிஜு நாராயணின் மனைவி ஸ்ரீலதா இறந்த செய்தியானது கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள திரையுலகில் பிரபலமான பாடகர் பிஜு நாராயணன். இவருடைய மனைவியின் பெயர் ஸ்ரீலதா. ஸ்ரீலதாவின் வயது 44. கேரளாவில் இருக்கும் மகாராஜா கல்லூரியில் இருவரும் ஒன்றாக படித்தபோது காதலித்தனர். 1998-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 

மூத்த மகனின் பெயர் சித்தார்த். இவர் ஒரு சட்டபட்டதாரி ஆவார். இளைய மகனின் பெயர் சூர்யா. அவர் பள்ளியில் படித்து வருகிறார்.ஸ்ரீலதா கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். 1993-ஆம் ஆண்டில் "பத்து வெலுப்பினு" என்ற மலையாள படத்தில் தன்னுடைய பாடல் கேரியரை தொடங்கினார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாடல்களை பாடியுள்ளார்.

ஸ்ரீலதா கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தார்.  இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது கேரள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.