பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்! மதுபானம் கிடைக்காததால் மனோரமா மகன் செய்த பகீர் செயல்! அப்பலோவில் அட்மிட்!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திரம் போன்ற எல்லா கதாபாத்திரங்களிலும் தனது சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மனோரமா. இவர் 1500 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நடிகை மனோரமாவுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். உலகமெங்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
55 வயதாகும் மனோரமாவின் மகன் பூபதி மது கிடைக்காததால், போதைக்காக தூக்க மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பூபதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.