தனது திரைப்படத்தில் நடித்த நடிகையின் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடும் பிரபல இயக்குனர்..! யார்? ஏன் தெரியுமா?

புகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடித்து கதாநாயகியின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும், காட்சிகளுக்கும் இவர் புகழ்பெற்றவர். தற்போது நாடு முழுவதிலும் சினிமா தியேட்டர்கள் இயக்கப்படவில்லை. ஆகையால் ஏற்கனவே வெளியிடுவதற்கு தயாராக இருந்த படங்களை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தற்போது ஓடிடி பிளாட்ஃபார்ம் முறையில் வெளியிட்டு வருகின்றனர். 

இதில் சற்று வேறுபட்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய சொந்த இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு தொடங்கியுள்ளார். இந்த மாதம் 6-ஆம் தேதியன்று "கிளைமாக்ஸ்" என்ற திரைப்படத்தை வெளியிட்டார். அடுத்ததாக "நேகட் நங்கா நக்னம்" என்ற படத்தை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் 2 டிரெய்லர்களை அவர் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். படத்தினை மக்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக நேற்று படத்தின் கதாநாயகியான ஸ்வீட்டி என்பவருடைய ஆபாசமிக்க கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்தகைய புகைப்படங்கள் படங்களில் இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் எந்தவித தணிக்கையும் இன்றி சமூகவலைத்தளங்களில் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்தவர்களோ அல்லது பெண்கள் அமைப்புகளை சேர்ந்தவர்களோ இத்தகைய புகைப்படங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமெண்ட் செய்யும் பகுதியில் ரசிகர் ஒருவர், "இயக்குபர் ராம் கோபால் வர்மா நிச்சயமாக ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். புகழ்பெற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் அவர்கள் புரிந்துக்கொள்ளும் வரை இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்‌.