என்ன யாருனு நினைச்சடா? உறவினை கொலை செய்து சடலத்துடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட கொடூர இளைஞன்! அதிர வைக்கும் காரணம்!

செல்போனால் ஏற்பட்ட தகராறினால் உறவினரென்றும் பாராமல் கொலை செய்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அலி மற்றும் ஜலாலுதீன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் வயிற்றுப் பிழைப்பிற்காக அங்கிருந்து கேரளா மாநிலத்திற்கு வந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் வசித்துவந்தனர்.

இதனிடையே அடிக்கடி செல்போனால் இருவருக்கும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்த அலி கத்தியால் ஜலாலுதீன் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

பின்னர் ஜலாலுதீன் சடலத்தை வீடியோவாக எடுத்து, அதனை இசையுடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களுக்கும் தனியாக அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் அலியை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை தெரிந்துகொண்ட அலி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தக்க சமயத்தில் காவல் துறையினர் அவரை காப்பாற்றி மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர்.

பின்னர் ஜலாலுதீன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். வேலு பரிசோதனை முடிந்த பின்னர் அவருடைய உடல் மாநிலத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது.

அலி நன்றாக குணமடைந்து வருவதாகவும், இதெல்லாம் அடைந்தவுடன் கைது செய்யப்படுவர் என்று கேரளா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.