கடந்த 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சூர்யா உதவி செய்கிறார்..! விஜய்க்கு தங்கை ஆகனும்..! நெகிழும் விஜயலெட்சுமி..!
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவயானி மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். காமெடி நடிகர் வடிவேல் இந்த திரைப்படத்தில் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அப்போது அவர் இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் உடன் இருந்த நட்பினை பற்றியும் விரிவாகக் கூறினார். சமீபத்தில் ஏற்பட்ட தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் நடிகை விஜயலட்சுமி பெங்களூரில் இருந்து சென்னைக்கு குடியேறினார். இதற்குப் பின் அவரது தாயார் உடல்நிலை மோசமாக இருந்த போது நடிகர் சூர்யா இவருக்கு உதவி செய்ததாகவும் கூறினார். ஆனால் நடிகர் விஜயுடன் மட்டும் இவர் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார் .
அதே சமயம் அவர் விஜய்க்கு தங்கையாக பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்ததை மிகவும் பெருமையாக பார்ப்பதாகவும் கூறினார் .உண்மையில் அவருடைய தங்கையாக நான் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கூறினார் நடிகை விஜயலட்சுமி.