பூட்டிய கழிவறையில் 5 நாட்களாக சிக்கி தவித்த சிறுமி! ஆனாலும் உயிர் பிழைத்த அதிசயம்!

தெலங்கானா மாநிலத்தின் மக்தால் பகுதியில் சிறுமி ஒருவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பகுதி நாராயணபேட்டை என்னும் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. ஹைதராபாத் நகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் நடத்திய விசாரணையில் குரவக்கச்சேரி அகிலா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தவறுதலாக பக்கத்து வீட்டு பாத்ரூமில் விழுந்துவிட்டாள்.

இந்த நிகழ்வு ஏப்ரல் 20-ம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் பிலாஸ்டிக் ஷீட் போடப்பட்டிருந்ததால் அவள் அதன் வழியாக விழுந்துள்ளாள் மேலும் அவள் முழுவதுமாக பாத்ரூமில் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றின் மேல் விழுந்ததால் எந்த அபாயமும் நிகழவில்லை. அந்த வீட்டின் ஒனரான வெங்கடேஷ் என்பவர் தன் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தார்.

வீடு திரும்பிய உடன் சிறுமியை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அந்த குழந்தை ஐந்து நாட்களாக பாத்ரூம் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்ப்பிழைத்துள்ளாள். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை‌ பெற்று வருகிறார்.

ஐந்து நாட்களாக பாத்ரூமிலிருந்து உயிர்ப்பிழைத்திருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.