குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ??

குழந்தைகளுக்கு கண்ணில் குறை இருப்பதை வெளியே சொல்லத் தெரியாது. ஆனால், குழந்தை படிக்கும்போது அருகில் இருந்து உன்னிப்பாக கவனிக்கும் பெற்றோர் குறைபாட்டை கண்டறிய முடியும். குறிப்பாக கண்களை சுருக்கி அல்லது புத்தகத்தை அருகில் வைத்துப் படித்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.


பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்றால் கீழ்க்கண்ட பிரச்னைகள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

* வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.

கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.

இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.

கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.

கண் கட்டி அடிக்கடி வருவது.

*  சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள்

இதுபோன்ற பிரச்னை தென்பட்டால்  உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்அப்போதுதான் குழந்தையால் இயல்பாக படிக்க முடியும்.