ரஜினிகாந்த் வீட்டுக் கல்யாணத்துக்கு அழகிரி வந்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெரும் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறதாம். உருவாகும் முன்பே அந்தக் கூட்டணியை பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின்
ரஜினியிடம் இருந்து அழகிரியை பிரிப்பது எப்படி? ஸ்டாலின் அவசர ஆலோசனை
ரஜினி மீது கன்னாபின்னாவென்று முரசொலியில் அறிக்கை வெளியிட்டு, மறு நாளே வரலாற்றில் முதன்முறையாக சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டது முரசொலி. இந்த லட்சணத்தில் சமீபத்தில் கமல்ஹாசனை போட்டு வறுத்துஎடுத்தது. அதாவது ஊழல் கட்சி என்ற ரீதியில் தி.மு.க.வுடன் சேர முடியாது என்று கமல்ஹாசன் சொன்னதைக் கேட்டு தி.மு.க. டென்ஷனானது.
உடனே பா.ஜ.க.வின் பி.டீம்தான் கமல்ஹாசன் என்ற ரீதியில் முரசொலியில் கடுமையான விமர்சனம் வெளியானது. முதல் நாள் திட்டிவிட்டு, அடுத்த நாள் தடவிக் கொடுப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் இனிமேல் ரஜினி மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.. ரஜினியும் அழகிரியும் ஒன்றாக இருக்கிறார்கள்.
இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று தனக்கு வேண்டப்பட்ட உறவு டீமிடம்
ஆலோசனை செய்கிறாராம் ஸ்டாலின்.
அழகிரி பிறந்த நாளை இந்த உலகமே மறந்துபோயிருந்த வேளையில், அவருக்கு வேண்டுமென்றே போன் செய்து, ‘அரசியலில் கடைசி பக்கம் என்று எதுவும் இல்லை‘ என்று டானிக் கொடுத்தார். இப்போது தமிழகத்தில் மிகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்தான் ரஜினி மகளுடைய திருமணப் பத்திரிகை கொடுத்தார்.
அதனால் அழகிரி ரஜினி வீட்டுத் திருமணத்திற்கு வரமாட்டார் என்றுதான் ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அழகிரியோ ஜம்மென்று வந்து கலந்துகொண்டார். ரஜினியும் அவரை மனமார வரவேற்று கட்டிப்பிடித்தார். இதைப் பார்த்துத்தான் ஸ்டாலின் டென்ஷன் ஆகிவிட்டாராம்.
கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோதும் ரஜினி இப்படித்தான் அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன்பிறகு கருணாநிதி படத்திறப்பு விழாவிலும் அழகிரிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். கல்யாண வீட்டிலும் இப்படி நடந்துகொண்டார்.
அதனால் இப்போதே அழகிரியை ரஜினியிடமிருந்து பிரிக்காவிட்டால் பெரிய சிக்கல்
பின்னால் ஏற்படலாம் என்பதால் எப்படி பிரிப்பது என்று தீவிரமாக ஆலோசனை செய்து
வருகிறாராம் ஸ்டாலின்.
யாராவது நல்ல ஆலோசனை இருந்தா சொல்லுங்கப்பா..